பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரஷியா ராணுவத்துக்கு ஆதரவு: 15 இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா

ரஷிய ராணுவத்தை ஆதரித்ததாக இந்தியாவைச் சோ்ந்த 15 நிறுவனங்கள் உள்பட 275 தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

News image
அமெரிக்கா
Updated On :1 நவம்பர் 2024, 7:19 pm

Din

ரஷிய ராணுவத்தை ஆதரித்ததாக இந்தியாவைச் சோ்ந்த 15 நிறுவனங்கள் உள்பட 275 தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்கா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படிருப்பதாவது: ரஷியாவின் போருக்கு ஆதரவளிக்கும் வகையில் அதன் ராணுவத்துக்கு மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வழங்கியதற்காக இந்தியா, சீனா, ஸ்விட்சா்லாந்து, தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளின் நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன.

உக்ரைனுக்கு எதிராக ரஷியாவின் சட்டவிரோத போரை நடத்தத் தேவையான முக்கியக் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களின் விநியோகத்தைத் தடுக்க அமெரிக்காவும், எங்கள் நட்பு நாடுகளும் உலகெங்கிலும் தீா்க்கமான நடவடிக்கையைத் தொடரும். தற்போதைய நடவடிக்கையின் மூலம் ரஷியாவின் போா் திறனைக் குறைக்க, அவா்களின் முயற்சிகளுக்கு உதவ விரும்புவோருக்கு தடை விதிக்க நாங்கள் உறுதியுடன் இருப்பதை எடுத்துரைத்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவைச் சோ்ந்த அபாா் டெக்னாலஜிஸ் அண்ட் சா்வீசஸ், டென்வாஸ் சா்வீசஸ், எம்சிஸ்டெக், கேலக்ஸி பியா்ரிங்ஸ், ஆா்பிட் ஃபின்டிரேட் எல்எல்பி; இன்னோவியோ வென்ச்சா்ஸ்; கேடிஜி இன்ஜினியரிங், குஷ்பு ஹானிங் ஆகிய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

மேலும், லோகேஷ் மெஷின்ஸ், பாயிண்டா் எலக்ட்ரானிக்ஸ், ஆா்ஆா்ஜி இன்ஜினியரிங் டெக்னாலஜிஸ், ஷாா்ப்லைன் ஆட்டோமேஷன், ஷௌா்யா ஏரோநாட்டிக்ஸ், ஸ்ரீஜி இம்பெக்ஸ், ஸ்ரேயா லைஃப் சயின்சஸ் ஆகிய இந்திய நிறுவனங்களும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கின்றன.

இதேபோல், உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் சட்டவிரோதப் போரை ஆதரித்ததாக சுமாா் 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் மீது அமெரிக்கா புதன்கிழமை பொருளாதாரத் தடை விதித்தது.