மத்திய கிழக்கில் போர்நிறுத்தம் ஏற்பட டிரம்ப் செயலாற்ற வேண்டும்: இராக் பிரதமர்
மத்திய கிழக்கில் போர்நிறுத்த நடவடிக்கைகள்: அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப்பிடம் இராக் வலியுறுத்தல்


இஸ்ரேல், காஸா, லெபனான், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்குப் பகுதிகளில் போர்ப்பதற்றம் தணியாமல் நீடிக்கிறது. இந்த நிலையில், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மீண்டும் அமைதி நிலவ, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் செயலாற்ற வேண்டுமென இராக் பிரதமர் சூடானி வலியுறுத்தியுள்ளார்.
காஸா மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்கள் முடிவுக்கு வராமல் தொடரும் நிலையில், லெபனான், ஈரான் நாடுகளில் இருந்து செயல்படும் ஆயுதப்படைகளைக் குறிவைத்தும் இஸ்ரேல் ராணுவம் அடுத்த கட்டமாகத் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது.
இந்த நிலையில், இராக்கை சுற்றிலும் போர்ப் பதற்றம் நிலவுவதால் தங்கள் நாட்டின் மீது தாக்குதல்கள் நிகழ்த்தபடாமலிருப்பதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை இராக் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் அடுத்த அதிபராகும் டிரம்ப்பிடம் இராக் தரப்பிலிருந்து போர் நிறுத்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பை வெள்ளிக்கிழமை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு இராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி பேசியுள்ளார்.
அப்போது டிரம்ப்பிடம், ‘மத்திய கிழக்குப் பிராந்தியங்களில் போர் நிறுத்தம் ஏற்பட செயலாற்றப் போவதாக தான் தேர்தல் வாக்குறுதியளித்தபடி டிரம்ப் செயலாற்ற வேண்டுமென்பதை’ சூடானி வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளதாக இராக் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்குப் பிராந்தியங்களில் போர் நிறுத்தத்துக்கு ஒருங்கிணைந்து முயற்சிகளை மேற்கொள்ள அமெரிக்கா - இராக் ஆகிய இரு தரப்பும் சம்மதித்துள்ளன.
ஈரானிலிருந்து செயல்படும் இஸ்லாமிக் ஸ்டேட்(ஐ எஸ்) ஆயுதப்படைகளின் தாக்குதல்களை சமாளிக்க இராக்குக்கு சுமார் 2,500 அமெரிக்க படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்க மற்றும் இராக் படைகளை குறிவைத்து இராக்கில் ஈரான் ஆதரவு அமைப்புகள் மூலம் டிரோன் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...