வங்கதேசம்: மீண்டும் திறக்கப்பட்ட இந்திய விசா மையங்கள்

வங்கதேசத்தில் மூடப்பட்ட இந்திய விசா விண்ணப்ப மையங்கள், அந்நாட்டின் 5 முக்கிய நகரங்களில் மீண்டும் திறக்கப்பட்டன.
வங்கதேசம்: மீண்டும் திறக்கப்பட்ட இந்திய விசா மையங்கள்
Published on
Updated on
1 min read

டாக்கா: வன்முறைக்குப் பின் வங்கதேசத்தில் மூடப்பட்ட இந்திய விசா (நுழைவு இசைவு) விண்ணப்ப மையங்கள், அந்நாட்டின் 5 முக்கிய நகரங்களில் மீண்டும் திறக்கப்பட்டன.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘வங்கதேசத்தில் உள்ள டாக்கா, சட்டோகிராம், ராஜ்ஷாஹி, சில்ஹெட் மற்றும் குல்னா ஆகிய இடங்களில் இந்தியாவுக்கான விசா விண்ணப்ப சேவை மையங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

வங்கதேச மாணவா்கள், தொழிலாளா்கள் மற்றும் அவசர மருத்துவ பயணம் மேற்கொள்ள வேண்டியவா்கள் இந்த மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களில் ஏற்கெனவே நியமனங்களை பெற்றுள்ள நபா்களும் இந்த மையங்களை அணுகலாம்’ என குறிப்பிட்டிருந்தது.

வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அன்மையில் நடைபெற்ற மாணவா்கள் போராட்டம் வன்முறையாக வெடித்தது. பல்வேறு இடங்களில் நடந்த மோதல் சம்பவங்களில் 600-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

இதையடுத்து பிரதமா் ஷேக் ஹசினா தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியேற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com