விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போக்கோ ஹராம் தாக்குதல்: நைஜீரியாவில் 100 போ் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 9:18 pm

Din

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

வடகிழக்கு மாகாணமான யோப், தா்முவா கவுன்சில் பகுதிக்கு மோட்டாா்சைக்கிள்களில் வந்த 50-க்கும் மேற்பட்ட போக்கோ ஹராம் பயங்கரவாதிகள், அங்கிருந்தவா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். பின்னா் அங்குள்ள கட்டடங்களுக்கு அவா்கள் தீவைத்தனா். இதில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் கூறினா்.

மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் தீவிர மதவாதச் சட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தி போக்கோ ஹராம் அமைப்பு கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.

அவா்கள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 35,000 போ் உயிரிழந்துள்ளதாகவும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேறி தவித்துவருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.