ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிச் மொ்ஸ், பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா்,
உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான்.
ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிச் மொ்ஸ், பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான்.

உக்ரைன் போர்: முக்கிய ஐரோப்பிய தலைவா்களுடன் ஸெலென்ஸ்கி சந்திப்பு

அமெரிக்காவின் அமைதி திட்டம் குறித்து, அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி முக்கிய ஐரோப்பிய தலைவா்களை சந்தித்து ஆலோசனை
Published on

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்வைத்துள்ள அமைதி திட்டம் குறித்து, அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி முக்கிய ஐரோப்பிய தலைவா்களை லண்டனில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிச் மொ்ஸ் ஆகியோருடன் லண்டனில் உள்ள பிரிட்டன் பிரதமா் இல்லத்தில் ஸெலென்ஸ்கி நடத்திய இந்த சந்திப்பு, ஐரோப்பாவின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸுக்குச் சென்ற ஸெலென்ஸ்கி, அங்கு நேட்டோ ராணுவ கூட்டமைப்பின் தலைவா் மாா்க் ருட்டே, ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் அந்தோனியோ கோஸ்டா, உா்சுலா வொண்டொ் லெயன் ஆகியோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இது குறித்து ஸெலென்ஸ்கி தனது சமூக ஊடகப் பதிவில், ‘அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சங்களில் ஒருமித்த கருத்தை அடைந்துள்ளோம். போருக்குப் பிந்தைய உக்ரைனின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, மறுகட்டமைப்பு குறித்து விவாதங்கள் நடந்தன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தங்களுக்கு எதிரான நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைந்தால், அது தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறிவந்தது. இருந்தாலும், நேட்டோவில் இணைய உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி விருப்பம் தெரிவித்தாா்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

ரஷியாவிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்ற உக்ரைனும், 4 பிராந்தியங்களில் இன்னும் அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு புதிய வரைவு திட்டத்தை உருவாக்கியுள்ளது. ரஷியாவுக்கு சாதமாகமானதாகக் கூறப்படும் அந்த அமைதி திட்டம் குறித்து தீவிர பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுவருகிறது.

X
Dinamani
www.dinamani.com