

ரஷியாவிடம் நிலத்தை விட்டுக்கொடுத்து அதன்பேரில் சமரசத்துக்கு இடமில்லை என்று உக்ரைனின் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி மீண்டுமொருமுறை வலியுறுத்திப் பேசினார். ரஷியாவும் உக்ரைனும் அமைதிப்பாதைக்குத் திரும்ப அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதில் முனைப்பு காட்டுகிறது. இந்த நிலையில், போர் நிறுத்தம் ஏற்பட முக்கிய நிபந்தனையாக உக்ரைனின் நிலப்பரப்பில் சில பகுதிகளை ரஷியா வசமாக்கிக்கொள்ள வலியுறுத்துகிறது.
உக்ரைனிடம் இதே கருத்தை அமெரிக்காவும் வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்வைத்துள்ள அமைதி திட்டம் குறித்து, அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி முக்கிய ஐரோப்பிய தலைவா்களை லண்டனில் திங்கள்கிழமை(டிச. 8) சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
இந்த நிலையில், மேற்கண்ட ஆலோசனைக்குப் பின் இது குறித்து செய்தியாளர்களுடன் ஸெலென்ஸ்கி பேசும்போது, “ரஷியா உக்ரைனிடம் நிலப்பகுதிகளை வழங்கக்கோருகிறது. ஆனால், எதையும் அவர்களிடம் தரப் போவதில்லை என்பதில் நாங்கள்(உக்ரைன்) தெளிவாக இருக்கிறோம். அதற்காகவே நாங்கள் போராடியும் வருகிறோம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.