ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

150 பெண்கள் பாலியல் வன்கொடுமை, 3,000 பேர் பலி! என்ன நடக்கிறது காங்கோவில்?

காங்கோ போரினால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் அடைக்கலம் இன்றி தவிப்பதாக அகதிகளுக்கான ஐ.நா. அவை தகவல்

காங்கோ போரால் பாதிக்கப்பட்ட குழந்தை - AP

Published On :14 பிப்ரவரி 2025, 7:47 pm IST

காங்கோ குடியரசு நாட்டில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் அடைக்கலம் இன்றி தவிப்பதாக அகதிகளுக்கான ஐ.நா. அவை கூறியது.

காங்கோ குடியரசு நாட்டில் எம்23 கிளர்ச்சிக் குழுவினருக்கும் ராணுவத்துக்கும் இடையிலான போரினால் 3.5 லட்சம் பேர் அடைக்கலம் இன்றி தவிப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அகதிகளுக்கான ஐ.நா. அவையின் செய்தித் தொடர்பாளர் கூறினார். கோமா நகரில் 70 சதவிகிதத்துக்கும் மேலான முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

தற்காலிக முகாம்கள் அழிக்கப்பட்டிருப்பதுடன், வெடிக்காத வெடிபொருள்களின் அச்சத்தால் மக்கள் வீட்டுக்கு செல்லவும் அஞ்சுகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளிலும் தேவலாயங்களிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர். ராணுவத்துக்கும், தீவிரவாத குழுக்களுக்கும் இடையிலான தாக்குதலால் சுமார் 3,000 பேர்வரையில் பலியாகினர்.

இதனிடையே, கடந்த வாரம் கோமா மத்திய சிறையில் இருந்த 4000 ஆண் கைதிகள் சிறைக்கு தீவைத்து விட்டு தப்பியோடினர். அதுமட்டுமின்றி, 150-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, சிறையைவிட்டு தப்பியோடியுள்ளனர்.

சிறை தீப்பிடித்த நிலையில், உள்ளிருந்த 165 பெண் கைதிகள் தீவிபத்தில் பலியாகினர். விபத்தில் பலியானோர் பெரும்பாலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.