கொல்லப்பட்ட மாணவர் ரவி தேஜா
கொல்லப்பட்ட மாணவர் ரவி தேஜா

இந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை!

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக...
Published on

இந்தியாவைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹைதராபாத் நகரின் ஆர்கே புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி தேஜா (26). இவர் தனது மேல் படிப்புக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்றார். தனது படிப்பை முடித்தவுடன் அங்கேயே வேலை தேடிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரிலுள்ள எரிவாயு நிலையத்தில் வைத்து மாணவர் ரவி தேஜா மர்ம நபர்களால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது அவரின் குடும்பத்தினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவரின் தந்தை சந்திரமௌலி, ”என்னால் பேச முடியவில்லை. எந்தத் தந்தையாலும் இதனைத் தாங்க முடியாது. யாருக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்படக் கூடாது” என வேதனையுடன் கூறினார்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து பதிலளித்த சிகாகோவில் உள்ள இந்தியத் தூதரகம், “இந்திய மாணவர் சாய் தேஜாவின் கொலை அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியது. குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியத் தூதரகமும், வெளியுறவு அமைச்சகமும் வழங்கும்" என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com