கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க திட்டம்: டொனால்ட் டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க திட்டமிருக்கிறது என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்

Updated On :24 ஜனவரி 2025, 10:48 am

DIN

அமெரிக்க அதிபராக பதவியேற்றிருப்பதைத் தொடர்ந்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்துப் பேச திட்டமிட்டிருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம், கிம் ஜாங் உன்னை சந்திப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப், ஆமாம், அவருக்கும் என்னைப் பிடிக்கும் என்று பதிலளித்தார்.

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொரியப் போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இருந்துவந்த பிணக்கு, அமெரிக்காவின் அதிபராக முதல் பதவிக் காலத்தின்போது மாறியது. டிரம்ப் மற்றும் கிம் இடையே வழக்கத்திற்கு மாறாக வலுவான உறவு நீடித்தது. டிரம்ப் இதற்கு முன்பு கிம் ஜாங் உடனான உறவை "மிக மிக அருமையான நட்பு" என்று விவரித்திருந்ததும், கிம் ஒரு புத்திசாலி என்றும் ஊடகங்களில் குறிப்பிட்டிருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.

டொனால்ட் டிரம்ப், தனது முதல் பதவிக் காலத்தின்போது மூன்று வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2019க்குள் நடந்தவை.

கடந்த 2019ஆம் ஆண்டு, வட கொரியாவுக்கு பயணம் செய்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை டொனால்ட் டிரம்ப் பெற்றார்.

இரண்டாவது முறை அதிபராகப் பதவியேற்றிருக்கும் டிரம்ப், கிம் ஜாங் உடனான உறவை நீட்டித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.