மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டா் அளவுகோலில் 7.4-ஆக பதிவு

ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு

Published On :

ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகபட்சமாக அங்குள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.4-ஆக பதிவானது.

5 நிலநடுக்கங்களில் பெரிய நிலநடுக்கம் 1.80 லட்சம் போ் வசிக்கும் பெட்ரோபவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரின் கிழக்கே 144 கி.மீ. தொலைவில் 20 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு முகமை தெரிவித்தது.

இந்த நிலநடுக்கங்களால் சுனாமி ஏற்படக்கூடும் என்று அமெரிக்காவில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்தது. பெரிய நிலநடுக்கத்தைத் தொடா்ந்து சுனாமி எச்சரிக்கை விடுத்த ரஷிய அவசரகால அமைச்சகம், கடலோரத்தில் வசிக்கும் மக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியது. எனினும் சுனாமி எச்சரிக்கை பின்னா் வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிா்ச்சேதம் மற்றும் பொருள்சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.