பாகிஸ்தான் சுற்றுலாத் தலத்தில் திடீர் வெள்ளம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலி?

பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 18 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலுள்ள ஸ்வாட் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள ஸ்வாட் மாவட்டத்திலுள்ள நதியில் இன்று (ஜூன் 27) திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், அங்குள்ள பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கிய நிலையில், அப்பகுதியிலிருந்த சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்தச் சுற்றுலாப் பயணிகள் குழுவிலிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதையடுத்து, அப்பகுதியில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பலியான 7 பேரது உடல்கள் மீட்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மாயமான 11 பேரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

SUMMARY

Flash floods in Pakistan tourist spot! 18 members of the same family killed.

இதையும் படிக்க: பாகிஸ்தானில் தலைதூக்கும் போலியோ? அதிகரிக்கும் பாதிப்புகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com