இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட பிரிட்டன் போரின் கடைசி விமானி ஜான் ஹெமிங்வே வயது மூப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 105.
இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் பிரிட்டன் ராணுவத்தினர் சரணடைய நிர்பந்திக்கப்பட்ட நிலையில் நாஜி படைகளை எதிர்த்துப் போராடிய ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களில் கடைசி விமானியான ஜான் ஹெமிங்வே வயது மூப்புக் காரணமாக காலமானார். 1940 ஆம் ஆண்டு நாஜி படைகளை எதிர்த்துப் போராடிய ஜான் ஹெமிங்வேவுக்கு அப்போதய வயது 20 தான்.
இதையும் படிக்க: தேநீர் சிந்திய நிறுவனத்துக்கு ரூ. 432 கோடி இழப்பு!
1919 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தற்போதைய அயர்லாந்தின் தலைநகர் டப்ளினின் ராத்மைன்ஸ் பகுதியில் ஜான் ஹெமிங்வே பிறந்தார். பின்னர் 1938 ஆம் ஆண்டு பிரிட்டனின் ராயல் விமானப்படையில் விமானியாக சேர்ந்தார்.
பிரான்சின் மீதான நாஜி படையெடுப்பின் போது, பின்வாங்கும் பிரிட்டிஷ் படைகளுக்கு போர் விமானங்களின் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றினார். போரின் முடிவில், ஹெம்மிங்வே வடக்கு இத்தாலியில் ஸ்பிட்ஃபயர்ஸை இயக்கிய எண். 43 படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார். 30 ஆண்டுகள் பணியாற்றிய ஜான் ஹெமிங்வே 1969 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.
இங்லீஷ் கால்வாய் கடற்கரையில் பிரிட்டன் போரில் பங்கேற்ற 2,941 வீரர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் ஜான் பெயரும் இடம்பெற்றுள்ளது.
1940 ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு எதிரான நாய்ச்சண்டை எனப்படும் போரில் ஜான் சிறப்பாக பணியாற்றினார். இதனால், இவருக்கு 1941 ஆம் ஆண்டு அவரின் வீரத்துக்காக பறக்கும் சிலுவை விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2-ஆவது முறையாக எம்எல்ஏ: வரலாறு படைத்த என்.எஸ்.என்.நடராஜ்

வளத்தூா் காளியம்மன் கோயிலில் முப்பெரும் விழா

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்

போருக்கு எதிராக தொடா்ந்து குரல் கொடுப்பேன் - டிரம்ப்பின் விமா்சனத்துக்கு போப் பதில்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


