மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

பாகிஸ்தானுக்கு விரையும் ரஷிய போர்க்கப்பல்: இந்தியாவுக்கு சொல்லவரும் சேதி என்ன?

பாகிஸ்தானுடன் இணைந்து ரஷிய போர்க்கப்பல்கள் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளவிருக்கின்றன.

போர்க்கப்பல்

Updated On :

பாகிஸ்தானுடன் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட ரஷியா முன்வந்திருப்பது, இந்தியாவுக்கு மறைமுகமாக சொல்லப்படும் அறிவுறுத்தல் என்று வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ரஷியாவின் கொள்கைகளுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காவிட்டால், அது பாகிஸ்தானுடன் நட்பை பலப்படுத்தும் என்பதையே, இதன் மூலம் தெரிவிக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் - ரஷியா கடற்படை கப்பல்கள் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவிருக்கின்றன. இதற்காக ரஷியாவின் போர்க் கப்பல்கள் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்கு வந்துள்ளன.

இதுவரை ரஷியா, இந்தியாவுடன் நெருங்கிய நட்புப் பாராட்டி வந்த நிலையில், நம் நாட்டின் நேரடி எதியான பாகிஸ்தானுடன் சற்று இடைவெளியைப் பின்பற்றி வந்தது. இந்த நிலையில்தான், பாகிஸ்தான் - ரஷியா கூட்டுப் பயிற்சி மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறியிருக்கிறது.

தற்போது சர்வதேச அளவில் பல நாடுகளுக்கு இடையேயான போர்ப் பதற்றம், வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் போன்றவற்றால் பாகிஸ்தானுடன் ரஷியாவும் நெருங்கத் தொடங்கியிருக்கிறது.

கராச்சி துறைமுகத்துக்கு வந்த ரஷியப் போர்க் கப்பல்களை, பாகிஸ்தான் நாட்டு கடற்படை அதிகாரிகள் வரவேற்றது தொடர்பான விடியோவை பாகிஸ்தான் ராணுவம் தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் இந்தப் பதிவை மேற்கோள் காட்டியிருக்கும் ரஷிய தூதரகம், "ரஷ்யா-பாகிஸ்தான் கடல்சார் ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க சாதனை படைக்கப்பட்டிருப்பதாக" பதிவிட்டிருக்கிறது.

இதன் மூலம், இந்தியா, தனது வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்காமல், அமெரிக்காவுடனோ அல்லது தனக்கு எதிரான நாடுகளுடனோ கைகோர்க்குமானால், பாகிஸ்தானுடன் தன்னுடைய உறவு பலப்படுத்தப்படும் என்று ரஷியா தெரிவிக்க விரும்புகிறதா என்ற கேள்வி எழுகிறது.

அதேவேளையில், தற்போதைய சர்வதேச நடப்புகளின்படி, ரஷியாவும், பாகிஸ்தானும் தனித்துவிடப்படலாம் என்ற நிலையில், அவைகள் கைகோர்க்கத் தொடங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.