
பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கப்பட்டது.
பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி, கடந்தாண்டில் எக்ஸ் தளத்தை முடக்கம் செய்து, அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால், பாகிஸ்தானில் போர்ப் பதற்றம் நிலவி வருவதால், அந்நாட்டு மக்கள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், தொடர்பு கொள்ளவும் வசதியாக எக்ஸ் தளத்தின் மீதான தடையை அந்நாட்டு அரசு நீக்கியது.
முன்னதாக, விபிஎன் (VPN) உதவியால் மட்டுமே எக்ஸ் தளத்தைப் பயன்படுத்தி வந்ததாகக் கூறிய அந்நாட்டு எக்ஸ் தளத்தின் பயனர்கள், தற்போது தன்னிச்சையாகவே எக்ஸ் தளத்தைப் பயன்படுத்த முடிவதாகக் கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.