தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

ஆக. 12-ல் பகலை இரவாக்கும் முழு சூரிய கிரகணம்! இந்தியாவில் காண முடியுமா?

இந்தாண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் குறித்து...

News image

சூரிய கிரகணம் - பிரதிப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:12 pm IST

இந்தாண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் வருகிற ஆக. 12 ஆம் தேதியில் நிகழவிருக்கிறது.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரே நேர்க்கோட்டில் சந்திரன் வரும் நிகழ்வே சூரிய கிரகணம். இது ஆண்டுக்கு 2 முதல் 5 முறை நிகழும். இதில் சூரியனை நிலவு முழுவதுமாக மறைத்து, நிலவின் நிழல் மட்டுமே பூமி மீது விழும். 2024-க்குப் பின் உலகில் தெரியும் முழு சூரிய கிரகணம் இதுவே.

இந்த நிகழ்வின்போது, முழுவதுமாக இருள் சூழ்ந்து இரவுபோலக் காட்சியளிக்கும். ஆர்க்டிக் கடல், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, போர்ச்சுகல் என வடக்கு ஸ்பெயின் வரை மேற்கிலிருந்து கிழக்காக நகர்ந்து முடியும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் இது பகுதி கிரகணமாக தெரியும்.

இருப்பினும், இந்தியாவில் இந்த நிகழ்வு ஆக. 12 ஆம் தேதி இரவு 9.04 மணி முதல் மறுநாள் (ஆக. 13) நள்ளிரவு 1.30 மணி வரையில் (சுமார் நான்கரை மணிநேரம்) நிகழ்வதால், இதனை இங்கு காண முடியாது.

ஆனால், இந்த நிகழ்வை நாசா நேரலையாக வெளியிடுவதால், அதன் வழியாக இணையதளத்தில் நாம் காணலாம்.

இதனிடையே, சூரிய கிரகணம் நிகழவிருப்பதையடுத்து, கூகுள் தேடுபொறியில் 'சூரிய கிரகணம்' 'Solar Eclipse' எனத் தேடினால் சூரியனை சந்திரன் மறைப்பது போன்ற சூரிய கிரகண நிகழ்வு திரையில் தோன்றுகிறது.

solar eclipse

Summary

Where will the total solar eclipse 2026 be visible from?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.