போராட்டக்களமான ஈரான்.. உயிரிழப்பு 5,000-ஐ கடந்தது!

உயிரிழந்தவர்களில் சுமார் 500 பேர் பாதுகாப்புப்படையினர் ...
போராட்டக்களமான ஈரான்.. உயிரிழப்பு 5,000-ஐ கடந்தது!
AP
Updated on
1 min read

ஈரானில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது.

ஈரானில் மோசமடைந்துள்ள பொருளாதார நிலைமையைக் கண்டித்து நாடெங்கிலும் தீவிரமடைந்துள்ள போராட்டம், தற்போது ஆட்சி மாற்றத்தைக் கோரும் மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. பதற்றமான சூழலைத் தொடர்ந்து, இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வடமேற்கு ஈரானின் குர்தீஷ் பகுதிகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும், ஈரானில் நடைபெறும் தொடர் போராட்டங்களில் உயிரிழந்தவர்களில் சுமார் 500 பேர் பாதுகாப்புப்படையினர் என்றும் களத்திலிருந்து வெளியாகும் தகவல் மூலம் அறிய முடிகிறது.

Summary

Iran protests: Verified death toll reaches at least 5,000, says official

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com