

சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில், சிரியாவின் பால்மைரா நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் மற்றும் மொழிப் பெயர்ப்பாளர் ஒருவர் என மூவர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, பயங்கரவாதிகளின் இருப்பிடங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடியாக தொடர்புகொண்ட அல்-காய்தாவின் முக்கிய தலைவர் எனக் கூறப்படும் பிலால் ஹசன் அல்-ஜாசிம் கொல்லப்பட்டதாக அமெரிக்கப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட பிலால் ஹசன், பால்மைரா தாக்குதலில் தொடர்புடையவர் என்றும் அமெரிக்கா கூறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.