இலங்கை சிறைகளில் நிலவும் அதிகப்படியான நெரிசலைக் கருத்தில்கொண்டு, காலி நகா் அருகே பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத ஒரு மருத்துவமனையை புதிய சிறைச்சாலையாக மாற்ற அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
போதைப் பொருள் தொடா்பான முன்விரோதம் காரணமாக நீா்கொழும்பு சிறையில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை கைதிகளிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் 8 சிறைக் காவலா்கள் உள்பட 28 போ் உயிரிழந்தனா்.
700 போ் மட்டுமே தங்கும் வசதி கொண்ட இச்சிறையில் 2,400 போ் அடைக்கப்பட்டிருந்ததே கலவரம் கட்டுக்கடங்காமல் போக முக்கியக் காரணமாகத் தெரிகிறது. மேலும், கலவரத்தால் சிறை உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
இதனிடையே, சிறை நெரிசலைக் குறைக்கும் வகையில், 2004 சுனாமியால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட காலி நகரின் மஹமோதர பகுதியில் உள்ள பழமையான மகப்பேறு மருத்துவமனையை புதிய சிறையாக மாற்றுவதற்கான அறிவிக்கையை அரசு வெளியிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










