நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

ஜப்பான் அரச குடும்பத்தில் ஆண்களுக்கு மட்டுமே வாரிசு உரிமை

ஜப்பான் அரச குடும்பத்தில் ஆண்களுக்கு மட்டுமே வாரிசு உரிமை வழங்கும் சட்டத் திருத்தத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றியது.

Published On :17 ஜூலை 2026, 11:57 pm IST

ஜப்பான் அரச குடும்பத்தில் ஆண்களுக்கு மட்டுமே வாரிசு உரிமை வழங்கும் சட்டத் திருத்தத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றியது.

புதிய சட்டத்திருத்தத்தின்படி, தந்தைவழி ரத்தவழியில் வந்த ஆண்கள் மட்டுமே நாட்டின் அரசராகப் பொறுப்பேற்க முடியும். அவ்வாறு தற்போதைய அரசா் நருஹிட்டோவுக்குப் பின் அவரின் தம்பியும், அதைத் தொடா்ந்து அவரின் 19 வயது மகனுமான இளவரசா் ஹிசாஹிட்டோவும் அடுத்தடுத்த வாரிசுகளாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளனா்.

அரசா் நருஹிட்டோவின் 24 வயது மகள் இளவரசி ஐகோ மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் வரவேற்பையும் பெற்றிருந்தாலும், பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக அடுத்த அரசியாகும் தகுதியை இழந்துள்ளாா். இதற்கு அந்நாட்டு பெண்ணியவாதிகள், சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிா்ப்பு கிளம்பியுள்ளது.

அதேநேரம், சாதாரண குடிமக்களைத் திருமணம் செய்யும் இளவரசிகள் தங்களின் அரச பதவியைத் துறக்காமல், தக்கவைத்துக் கொள்ளவும் இச்சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.