மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

நெதன்யாகுவை ‘பைத்தியம்’ எனக் கூறியது உண்மைதான்! டிரம்ப்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனான தொலைப்பேசி உரையாடல் குறித்து டிரம்ப் விளக்கம்.

News image

அமெரிக்க அதிபர் டிரம்ப் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - ஏபி

Updated On :4 ஜூன் 2026, 10:37 am IST

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான தொலைப்பேசி உரையாடலின் போது, அவரை பைத்தியம் எனக் கூறியது உண்மைதான் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் அமெரிக்கா சண்டை நிறுத்தம் செய்ததையடுத்து, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின்பேரில் வாஷிங்டனில் வைத்து இஸ்ரேலுக்கும், லெபனான் அரசுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.

இதனிடையே, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினருக்கு எதிராக இஸ்ரேல் படைகள் தாக்குதலை தொடர்ந்த நிலையில், அமெரிக்காவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக ஈரான் திங்கள்கிழமை அறிவித்தது.

தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமரைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்ட டிரம்ப், அவரிடம் மிகக் கோபமாக பேசியதாகவும், அப்போது நெதன்யாகுவை ‘பைத்தியம்’ எனக் கூறியதாகவும் வாஷிங்டன் அதிகாரிகள் ஆக்சியோஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நெதன்யாகுவை தான் பைத்தியம் எனக் கூறியது உண்மைதான் என்று டிரம்ப் உறுதி செய்துள்ளார்.

நியூ யார்க் போஸ்ட் செய்தி நிறுவனத்தின் பாட்காஸ்ட் நிகழ்வில், இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “உண்மைதான். இதைக் கோபத்தில் சொன்னேன் என்று கூறமுடியாது. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில், தொடர்ந்து லெபனானுடன் அவர் சண்டையிட்டுக் கொண்டிருந்ததால், நான் சற்று கவலை அடைந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நெதன்யாகுவுக்கு தொலைப்பேசியில் டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததாக ஆக்சியோஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ”நீங்கள் ஒரு பைத்தியம். நான் மட்டும் இல்லையென்றால், நீங்கள் இந்நேரம் சிறையில் இருந்திருப்பீர்கள். நான் உங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். இப்போது அனைவரும் உங்களை வெறுக்கிறார்கள். இதன் காரணமாகவே, இஸ்ரேலையும் அனைவரையும் வெறுக்கிறார்கள்” என்று டிரம்ப் பேசியதாக தெரிவிக்கப்பட்டது.

Summary

It is true that I called Netanyahu crazy — Trump

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.