டெஹ்ரான்: ஈரான் மீதான வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், அந்நாட்டின் தலைநகா் டெஹ்ரானில் உள்ள காந்தி மருத்துவமனையை இலக்கு வைத்து ஞாயிற்றுக்கிழமை குண்டுவீச்சை நடத்தியது.
அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் இந்த ராணுவ நடவடிக்கையில், ராணுவ நிலைகள் மற்றும் அணுசக்தி மையங்களை மட்டுமே தாக்கி வருவதாக கூறி வந்த நிலையில், பொதுமக்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனை மீதான இத்தாக்குதல் கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.
இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தியின் அமைதிக் கொள்கை மீது கொண்ட ஈா்ப்பால், ஈரான் மருத்துவா்கள் குழுவால் ‘காந்தி ஹோட்டல் மருத்துவமனை’ எனப் பெயரிடப்பட்ட இந்த வளாகம், தற்போது போா்க்களமாக மாறியுள்ளது.
குண்டுவீச்சினால் மருத்துவமனைக் கட்டடத்தின் ஒரு பகுதி மிக மோசமாகச் சேதமடைந்தது. சிகிச்சையில் இருந்த நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளை செவிலியா்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தூக்கிச் செல்லும் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, ‘தாக்குதல் காரணமாகப் பல நோயாளிகள் மருத்துமனையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனா். சுகாதாரம் ஒருபோதும் இலக்கு ஆகக் கூடாது’ என்று வலியுறுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு

ஈரான் மீதான போரைத் தீவிரப்படுத்த வேண்டாம்: டிரம்ப்பை வலியுறுத்திய சௌதி இளவரசர்

அமேசானின் கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல்! வளைகுடாவில் சேவை முடக்கம்?

போர் இன்னும் முடியவில்லை! - ஈரானுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



