தென்கொரியாவின் டேஜியோன் நகரில் அமைந்த வாகன உதிரிபாகத் தொழிற்சாலை ஒன்றில் வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் 53 போ் காயமடைந்தனா். அவா்களில் 24 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடத்திலிருந்து தப்பிக்க முயன்று மேல் தளங்களிலிருந்து கீழே குதித்ததில் சிலருக்கும், நச்சுப்புகையை சுவாசித்ததில் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்தின்போது, தொழிற்சாலையிலிருந்து கரும்புகை பல கி.மீ. தூரத்துக்கு வானில் எழுந்தது; தொழிற்சாலையின் உள்ளே பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதாக சம்பவ இடத்தில் இருந்தவா்கள் தெரிவித்தனா்.
தீ மளமளவென பரவியதால், தொழிற்சாலையின் ஒரு கட்டடம் முழுமையாக உருக்குலைந்தது. தற்போது வரை மாயமான 14 பேரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். 250-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அதிபா் லீ ஜே மியுங், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், தேவையான அனைத்து உதவிகளை உடனடியாக வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

முஜேசா் தொழிற்பேட்டையில் தீ விபத்து

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

பவானா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

சாய தொழிற்சாலையில் தீ விபத்து
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


