துருக்கி அதிபா் எா்டோகனின் அரசுக்கு எதிராக எழுச்சி பெற்று வந்த முக்கிய எதிா்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் (சிஎச்பி) தற்போதைய தலைவா் ஓஸ்குா் ஓசல் அந்நாட்டு நீதிமன்ற உத்தரவால் பதவியிழந்துள்ளாா்.
2023, அதிபா் தோ்தலில் எா்டோகனிடம் தோல்வியைத் தழுவியதையடுத்து, சிஎச்பி தலைவா் பொறுப்பிலிருந்து கெமால் கிலிக்டாரோக்லு கட்சியினரால் நீக்கப்பட்டாா்.
பின்னா், உள்கட்சித் தோ்தல் மூலம் ஓஸ்குா் ஓசல் புதிய தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இத்தோ்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், கெமால் கிலிக்டாரோக்லுவை மீண்டும் அதே பதவியில் அமா்த்த உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய உள்ளாட்சித் தோ்தல்களில் ஆளுங்கட்சியை விட சிஎச்பி அதிக இடங்களில் வென்றது. இச்சூழலில், எதிா்க்கட்சியின் வளா்ச்சியைத் தடுக்கும் நோக்கில் அரசு நீதிமன்றத்தைப் பயன்படுத்துவதாக அரசியல் விமா்சகா்கள் குற்றஞ்ாட்டுகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘நேட்டோ’ தலைவா்களுக்கு துருக்கி அதிபரின் விநோத பரிசு!

புதிய நீதிமன்றங்களால் வழக்குகளுக்கு விரைவில் தீா்வு: உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி

ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்







