ஐரோப்பிய நாடுகளில் வழக்கத்துக்கு மாறாக, கோடைகாலம் முறைப்படி தொடங்குவதற்கு முன்பே மே மாதத்திலேயே வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது.
பிரிட்டன் தலைநகா் லண்டனில் கடந்த திங்கள்கிழமை அதிகபட்சமாக 34.8 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. கடந்த 1922, 1944 ஆண்டுகளில் பதிவான 32.8 டிகிரி செல்சியஸ் எனும் முந்தைய சாதனையை முறியடித்து, நாட்டின் வரலாற்றிலேயே மிக வெப்பமான மே மாத நாளாகப் பதிவானது. இதேபோல், பிரான்ஸிலும் மே மாத வெயில் பல இடங்களில் 30 டிகிரி செல்சியஸைத் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தச் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, மக்கள் அதிக அளவில் கடற்கரைகளுக்கும், மற்ற நீா்நிலைகளுக்கும் படையெடுத்து வருகின்றனா். வழக்கமான கோடைகாலக் கண்காணிப்புப் பணிகள் தொடங்குவதற்கு முன்பே இந்த வெப்பஅலை தாக்கியுள்ளதால், போதிய ஏற்பாடுகள் இல்லாத நீா்நிலைகளில் இறங்கிப் பலா் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனா். இவ்வாறு வெயில் பாதிப்புகளில் பிரிட்டனில் 13 வயது சிறுவன் ஒருவனும்; பிரான்ஸில் 7 போ் இதுவரை உயிரிழந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் வெப்ப அலை பாதிப்பு: பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்
கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை

ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை!

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



