ஐரோப்பாவில் வரலாறு காணாத வெய்யில் பதிவாகி வரும் நிலையில், பாரிஸ் - நைஸ் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில், திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
உச்ச வெய்யிலில் குளிர்சாதன வசதி இல்லாமல், நான்கு மணி நேரம் பயணிகள் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்த சம்பவம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் இருந்த நிலையில், கடும் வெப்பத்தால் ரயிலுக்குள் மூச்சு விட முடியாமல் அவதியடைந்த பயணிகள் ரயிலிலிருந்து இறங்கிவிட்டனர். இந்த விடியோ வைரலாகி வருகிறது.
ஒரு சாதாரண போக்குவரத்து வசதியைக்கூட, கடுமையான வெப்பம் எவ்வாறு பாதித்திருக்கிறது. இனி வருங்காலங்களில் மக்கள் எவ்வாறு வாழப்போகிறோம் என்பதை நினைத்துத்தான் பலரும் இந்த விடியோவைப் பார்த்து கவலை தெரிவித்து வருகிறார்கள்.
கடும் வெப்பத்தால், பெட்டிகளுக்குள் இருந்த மக்களால் மூச்சுவிட முடியாமல் தவித்திருக்கிறார்கள். உடனடியாக அவர்கள் ரயிலை நிறுத்தி வயல் பகுதியில் நின்ற ரயிலில் இருந்து வெளியே இறங்கி மூச்சுவிடத் தொடங்கினர்.
பிரான்ஸ் நாட்டில் பதிவாகி வரும் வெப்ப அலை, பாரிஸ் - நைஸ் ரயில் பயணத்தை பலருக்கும் ஒரு கெட்ட கனவாக மாற்றிவிட்டது.
பல பயணிகள், மீண்டும் ரயிலுக்குள் ஏறுமாறு ரயில்வே காவல்துறையினர் அறிவுறுத்தியும் ஏற மறுத்துவிட்டனர். நூற்றுக்கணக்கானோர் அங்கிருந்த கட்டடம் ஒன்றுக்குள் அமைதியாக ஏறி அமர்ந்துகொண்டனர்.
இவற்றை பார்த்த பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட, அதில் ஒருவர், இந்தியாவில் குளிர்சாதன வசதி இல்லாத போக்குவரத்து வழித்தடத்தில் பயணிக்கும் மக்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.
Summary
About the incident where passengers on a train stopped in the scorching sun became stranded..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடும் வெய்யிலில் மாமியாரை முதுகில் சுமந்து சென்ற பழங்குடியின பெண்! ரூ.500க்காகவா?

பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து

பரமக்குடி ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல்

பிருந்தாவன் விரைவு ரயில் இன்ஜின் பழுது: பயணிகள் கடும் அவதி
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



