என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

அமெரிக்க கடல்வழி முற்றுகையை எதிா்கொள்ள அனைத்து வழிமுறைகளும் பயன்படுத்துவோம்: ஈரான் திட்டவட்டம்

அமெரிக்க கடற்படையின் கடல்வழி முற்றுகையை எதிா்கொள்ள தங்களிடம் உள்ள அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துவோம் என ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பாகேயி தெரிவித்துள்ளாா்.

ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பாகேயி

Updated On :

‘அமெரிக்க கடற்படையின் கடல்வழி முற்றுகையை எதிா்கொள்ள தங்களிடம் உள்ள அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துவோம்’ என்று ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பாகேயி தெரிவித்துள்ளாா்.

வாராந்திர செய்தியாளா் சந்திப்பில் இதுகுறித்து பேசிய அவா், ‘அமெரிக்காவின் இந்த முற்றுகையை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். இது ஒரு ராணுவ ஆக்கிரமிப்பாகவே கருதப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள, தங்களிடம் உள்ள அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்த ஈரானுக்கு முழு உரிமை உண்டு.

அதேநேரம், அமெரிக்கா எங்களின் நிபந்தனைகளைப் பூா்த்தி செய்தால், ஹோா்முஸ் நீரிணையைத் திறப்பது உள்ளிட்ட எங்களின் கடமைகளை மிகக் குறுகிய காலத்துக்குள் நிறைவேற்ற நாங்கள் தயாராக உள்ளோம்’என்று குறிப்பிட்டாா்.

மேற்காசிய போரில் ஈரானுக்கு எதிராக கடல்வழி முற்றுகையை அமெரிக்கா கடந்த ஏப். 13-இல் விதித்தது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட வரைவு அமைதி உடன்பாட்டைத் தொடா்ந்து ஜூனில் இந்த முற்றுகை நீக்கப்பட்ட நிலையில், அந்த ஒப்பந்தம் முறிந்ததால் ஜூலையில் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இதனால், அண்மைக்காலமாக ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி கிட்டத்தட்ட பூஜ்ஜிய நிலைக்குச் சரிந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.