என்விடியா நிர்வாகக்குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!
என்விடியா நிர்வாகக்குழு நல்ல முடிவை எடுத்துள்ளது என டிரம்ப் பாராட்டியுள்ளது குறித்து...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்
என்விடியா நிர்வாகக்குழு நல்ல முடிவை எடுத்துள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை (நவ. 23) தெரிவித்துள்ளார்.
சீன உளவாளியாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடனான தனிப்பட்ட உறவு தேச பாதுகாப்புக்கு எதிரானதாக அமையும் என குற்றச்சாட்டு எழுந்ததால், தனது பதவியை கடந்த 13 ஆம் ஆண்டு ஜென்சன் பதவி விலகியிருந்த நிலையில், தற்போது மீண்டும் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜென்சன் பதவி நீக்கத்துக்குப் பிறகு, இறங்கிய நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது ஏற்றத்தைக் கண்டுள்ளது.
இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கும் நல்ல முடிவை என்விடியா இயக்குநர் குழு எடுத்துள்ளது. நிறுவனத்தின் வெற்றியையும் வளர்ச்சியையும் மட்டுமல்லாமல், அமெரிக்கப் பொருளாதாரத்தின் வெற்றியையும் வளர்ச்சியையும் உறுதி செய்வதற்கு, என்விடியாவில் ஜென்சனின் தலைமைத்துவம் நாட்டிற்குத் தேவைப்படுகிறது.
எந்தவொரு சட்டவிரோதச் செயலிலும் ஜென்சன் ஹுவாங் ஈடுபட்டதற்கான ஆதாரம் அமெரிக்க அரசாங்கத்திடம் இல்லை என்பதை அமெரிக்காவின் தலைமை வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தனிப்பட்ட முறையில், நான் ஜென்சனை நன்கு அறிவேன்; அவர் ஒரு மாபெரும் தேசபக்தர் மற்றும் நாட்டின் பொக்கிஷம்.
ஜென்சனுக்கும், என்விடியா நிர்வாகக் குழுவிற்கும், அமெரிக்க மக்களுக்கும் மட்டுமல்லாது, உலகத்திற்கே வாழ்த்துகள் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Summary
US President Donald Trump stated on Monday (Nov. 23) that the board of directors of Nvidia has made a good decision.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


