நேபாள வெள்ளம்! காணாமல் போன 213 இந்தியர்கள் உள்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு!அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!சரத் பவார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!ஆண் பணியாளர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!திருப்பதி வரலாற்றில் முதல்முறை! 121 கிலோ தங்க நகை! காணிக்கை செலுத்திய சென்னை பக்தர்!கணவர், மகனுக்கு ஸ்லோ பாய்ஸன்! பெண்ணைக் காட்டிக்கொடுத்த ஈயம்! பின்னணி என்ன?வங்கி லாக்கரில் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? அறிவது அவசியம்!திருப்பரங்குன்றம் வழக்குகள் நாளை விசாரணை! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!இந்திய அரசியலமைப்பு நாள்: அரும்பங்காற்றிய தலைவர்களை நினைவுகூர்வோம் - முதல்வர் விஜய்ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு: கே.என். நேரு சகோதரரின் உதவியாளர் கைது!மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கான திமுகவின் போராட்டம் தொடரும்! மு.க. ஸ்டாலின்சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு: டிச. 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!கள்ளக்குறிச்சி வழக்கில் முதல்வர், தலைமைச் செயலரையும் சேர்க்க வேண்டும்! உதயநிதி பேட்டிஎம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார்!

நள்ளிரவில் மீண்டும் காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 8 பேர் பலி!

நள்ளிரவில் காஸா நகரத்தின் மீதான இஸ்ரேலிய படைகளின் வான்வழித் தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டது குறித்து...

Israeli strikes kill eight in Gaza as near-daily attacks persist despite ceasefire

நள்ளிரவில் காஸா நகரத்தின் மீதான இஸ்ரேலிய படைகளின் வான்வழித் தாக்குதல்களில் 8 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்... - AP

Updated On :

நள்ளிரவில் காஸா நகரத்தின் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா நகரம் மற்றும் மத்திய காஸா பகுதிகளைக் குறிவைத்து கடந்த புதன்கிழமை (நவ. 26) இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை இஸ்ரேலிய படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல்களில், 8 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக, காஸாவின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், தெயிர் அல்-பலாஹ் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் மீதான தாக்குதலில் அங்கு வசித்து வந்த பாலஸ்தீன தம்பதி கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் பொருளாதாரம் மற்றும் கல்வி விவகாரங்களின் அதிகாரியான காலெத் அபு நடா என்பவர் கொல்லப்பட்டதாக, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து, தாக்குதல்கள் மூலம் 3 பயங்கரவாதிகளைக் கொன்றதாகக் கூறிய இஸ்ரேல் ராணுவம், அதுபற்றிய விரிவான தகவல்கள் வெளியிடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் காஸா மீதான இஸ்ரேலின் போரில், ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட சுமார் 74,700-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த 2025 அக்டோபரில் அமைதி ஒப்பந்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டதற்குப் பிறகான இஸ்ரேலிய தாக்குதல்களில் மட்டும் 1,600-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that 8 people were killed in airstrikes carried out by Israeli forces on Gaza City in the middle of the night.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.