அமெரிக்கா திருடிய 2 எண்ணெய்க் கப்பல்கள் மீட்பு! - ஈரான் அறிவிப்பு!
அமெரிக்க ராணுவம் திருடிய தங்களின் 2 எண்ணெய்க் கப்பல்களை மீட்டுள்ளதாக ஈரானிய கடற்படை அறிவிப்பு...

எண்ணெய்க் கப்பல்... - கோப்புப் படம்
அமெரிக்க ராணுவப் படைகள் திருடிச் சென்ற ஈரானின் 2 எண்ணெய்க் கப்பல்களும் மீட்கப்பட்டுள்ளதாக, ஈரானிய கடற்படை அறிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்காவின் போரைத் தொடர்ந்து, சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கியுள்ளன. இதையடுத்து, ஹோர்முஸ் பகுதியில் அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, ராணுவ நடவடிக்கையின் போது அமெரிக்க படைகள் கைப்பற்றிய ஈரானின் 2 எண்ணெய்க் கப்பல்களை மீட்டுள்ளதாக, ஈரானிய கடற்படைத் தளபதி ஷாராம் ஈரானி இன்று (நவ. 27) அறிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறுகையில்,
“அமெரிக்க ராணுவம் ஈரானின் 2 எண்ணெய்க் கப்பல்களைத் திருடியது. ஆனால், அந்தக் கப்பலிலிருந்த அவர்களின் பணியாளர்கள் உறங்கியபோது, எங்களின் படைகள் கப்பல்களுக்குள் ஏறி அவற்றை மீட்டு வந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இத்துடன், ஹோர்முஸ் பகுதியில் ஈரானின் அனுமதியின்றி செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்க ராணுவம் கட்டணம் வசூலிப்பதாக, ஈரான் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், ஈரானின் எண்ணெய்க் கப்பல்கள் எப்போது திருடப்பட்டன, அவை எப்போது மீட்கப்பட்டன என்பவைக் குறித்து விரிவான தகவல்கள் வெளியாகவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி அமெரிக்கா இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வெளிநாட்டு கப்பல்களை ஈரானிய படைகள் அனுமதித்து வருகின்றன. மற்ற வழிகளில் கப்பல்களைத் தகர்க்கும் கண்ணிவெடிகளை ஈரானிய படைகள் பொருத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The Iranian Navy has announced that two Iranian oil tankers, which had been stolen by U.S. military forces, have been recovered.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


