10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கையிருப்பை வெளியிட ஜி7 நாடுகள் முடிவு! விலை குறைய வாய்ப்பு

அடுத்த 4 மாதங்களில் 100 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் கையிருப்பை வெளியிட ஜி7 நாடுகள் முடிவெடுத்தது குறித்து...

Crude oil

கச்சா எண்ணெய் - பிரதிப்படம்

Published On :

கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தடுக்க 100 மில்லியன் பீப்பாய் கையிருப்பை வெளியிட ஜி7 நாடுகள் முடிவெடுத்துள்ளன.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ப் பதற்றத்தால் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எண்ணெய் விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

பிரிட்டனில் வரலாற்றில் முதன்முறையாக டீசலின் விலை லிட்டருக்கு 2 பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 254) என்ற உச்சத்தை அடைந்துள்ளது.

உலகளாவிய நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நாடுகளும் தொடர்ந்து போராடி வருகின்றன. இதனாலேயே மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ப் பதற்றத்தைத் தணிக்கவும் உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இதனிடையே, ஐரோப்பிய நாடுகளிடம் உள்ள கச்சா எண்ணெய் கையிருப்பை வெளியிட்டு, எண்ணெய் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். இல்லையெனில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீசலுக்கு தடை விதிக்கப்படும் என எச்சரித்தார்.

இந்த நிலையில், தங்களிடம் உள்ள கச்சா எண்ணெய் கையிருப்பை வெளியிடவிருப்பதாக பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ஜி7 நாடுகள் முடிவெடுத்துள்ளனர்.

அடுத்த 4 மாதங்களில் 100 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் வெளியிடப்படும் என்றும், முதல் 20 நாள்களுக்குள் கணிசமான அளவு டீசல் முன்கூட்டியே வெளியிடப்படும் என்றும் ஜி7 நாடுகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.

Summary

G7 nations to release 100 million barrels of energy reserves after diesel prices reach record highs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.