ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

ஏஐ டோக்கன்கள் இல்லாமல் வேலை செய்ய இயலாத நிலை ஏற்படுமா?

ஏஐ டோக்கன்கள் இல்லாமல் வேலை செய்ய இயலாத நிலை ஏற்படுமா என்பது பற்றி...

ஏஐ டோக்கன்கள்

ஏஐ டோக்கன்கள்

Published On :

மாதக் கடைசியில் ஏஐ டோக்கன்கள் இல்லாவிட்டால் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சமூக வலைத்தளங்களில் நகைச்சுவைகள் வெளியாகி வருகின்றன.

ஆனால், மென்பொருள் நிறுவனங்களில், விரைவில் ஏஐ டோக்கன்கள் இல்லாமல் வேலையே செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், இந்த நகைச்சுவை மிக விரைவில் துயரச்சுவையாக மாறிவிடும்.

இதுவரை, மென்பொருள் நிறுவனங்களில், ஒரு பணியாளருக்கான ஏன் டோக்கன்கள் தீர்ந்துவிட்டதால், அவர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டார்கள் அல்லது விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான தகவல்கள் இல்லை.

ஆனால், சமூக வலைத்தள நகைச்சுவை மட்டும் விரைவில் உண்மையாகிவிடுமோ என்ற கலக்கம் ஏற்பட்டுள்ளது.

கணினி தொழில்நுட்பத்தில் ஏஐ பல வேலைகளை எளிதாக்குகிறது, விரைவாக்குகிறது, ஆனால், ஏஐ உதவியில்லாமல் வேலை செய்ய முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டால் அப்போதுதான் நிலைமை மோசமாகும்.

இது ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்த ஆயாவை, கைவிட்டுவிட்டு செத்த பிறகு தேடும் நிலையை உருவாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மெட்டா, உபெர் போன்றவை இப்போதே அளவுக்கு அதிகமாக ஏஐ பயன்பாட்டை மேற்கொண்டு வருகின்றனவாம். எப்போதுமே இது இலவசமாகவோ அளவற்றதாகவோ கொடுக்கப்படாது. எனவே, நகைச்சுவை இன்று சிரிக்க உதவலாம், நாளை சிந்திக்கவும் உதவுகிறது என்பதே பொருள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER