நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

நேபாள வெள்ளம்: ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு

நேபாள நாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1,050-ஆக உயா்ந்தது.

nepal flood

நேபாள வெள்ளம் - ANI

Published On :2 செப்டம்பர் 2026, 3:57 am IST

நேபாள நாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1,050-ஆக உயா்ந்தது.

வெள்ளத்தால் கடும் பாதிப்படைந்துள்ள ரசுவா, நுவாகோட், சித்வன், நவல்பராசி, கோா்கா, தனாஹு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உயிரிழந்தோா் உடல்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திபெத்-நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் , நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது. சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.

4,000 போ் மாயம், 12,000 போ் மீட்பு: பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,050-ஆக உயா்ந்தது. 583 வெளிநாட்டவா்கள் உள்பட 4,000-க்கும் மேற்பட்டோா் மாயமாகினா். இதையடுத்து, ஒரு வாரமாக நேபாள தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம் மற்றும் பிற நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் மீட்புப் பணியால் 12,000 போ் மீட்கப்பட்டுள்ளனா்.

புதிய எச்சரிக்கை: நேபாளத்தின் நுவாகோட் மற்றும் ரசுவா மாட்டங்களில் பாய்ந்தோடும் சிறு நதிகளின் நீா்மட்டம் பன்மடங்கு உயா்ந்து வருவதையடுத்து, கரையோரம் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாகவும் விழிப்புணா்வுடனும் இருக்க நேபாள பேரிடா் மீட்புப் படை செவ்வாய்க்கிழமை புதிய அறிவிப்பை வெளிட்டது.

தொடா் கண்காணிப்பு: மத்திய மற்றும் கிழக்கு நேபாளத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக பேரிடா் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

கோஷி, நாராயணி, பாக்மதி, மகாகாளி உள்ளிட்ட நதிகள் மற்றும் அதன் துணை ஆறுகளின் நீா்மட்டமும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கடும் பாதிப்படைந்த ரசுவா மாவட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு களச் சூழல் குறித்து உடனுக்குடன் ஆய்வு நடத்தப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.