
457 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உலக வரைபடம்! இந்தியா ஆதரவும் அமெரிக்கா எதிர்ப்பும்!
16 ஆம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் உலக வரைபடத்துக்குப் பதிலாக, புதிய வரைபடம் கொண்டுவரப்படுவது குறித்து...
ஐக்கிய நாடுகள் அவை - General Assembly of United Nations
16 ஆம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் உலக வரைபடத்தை நீக்கி, புதிய வரைபடம் கொண்டு வருவதற்கு ஐநா அவையில் இந்தியா ஆதரவளித்தது.
16 ஆம் நூற்றாண்டில் கடல்வழி பயணங்களுக்காக மெர்கேட்டர் உலக வரைபடத்தை 1569-ல் ஜெரார்டஸ் மெர்கேட்டர் உருவாக்கினார்.
ஆனால், இந்த வரைபடத்தில் பூமத்திய ரேகையிலிருந்து தொலைவிலிருக்கும் நிலப்பரப்புகளை நிஜ அளவைவிடப் பெரிதாகக் காட்டியது. ஆப்பிரிக்காவை விட 14 மடங்கு சிறியதான கிரீன்லாந்தை, ஆப்பிரிக்காவின் அதே அளவில் காட்டியது. அதேபோல், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பகுதிகள் அளவுக்கு அதிகமாகப் பெரிதாகக் காட்டப்பட்டு வந்தன.
இந்த நிலையில்தான், பழைய மெர்கேட்டர் வரைபடத்துக்குப் பதிலாக, இனிவரும் காலங்களில் புதிய ஈக்வல் உலக வரைபடத்தைப் பயன்படுத்த ஐநா அவை முடிவு செய்தது.
2018-ல் வரைபடக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஈக்வல் வரைபடம், அனைத்து கண்டங்கள், நாடுகளின் சரியான பரப்பளவை சரியான விகிதத்தில் துல்லியமாகக் காட்டுகிறது. இதன் மூலம், ஆப்பிரிக்க கண்டம் முன்பைவிட பெரியதாகவும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதிகள் அவற்றின் நிஜமான சரியானதாக சிறிய அளவிலும் காட்டப்படுகின்றன.
இதனால், உலகெங்கிலும் அனைவருக்கும் உலக அமைப்பைப் பற்றிய சரியான புவியியல் பார்வையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தீர்மானத்தையும் ஐநா அவையில் கொண்டுவரப்பட்டது.
ஐநா அவையில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்பட 164 நாடுகள் ஆதரவளித்தன. தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்கா மட்டும் வாக்களித்தது.
அதே நேரம், இந்த வாக்கெடுப்பில் எஸ்டோனியா, ஜார்ஜியா, லிதுவேனியா, மால்டோவா, செர்பியா, உக்ரைன் ஆகிய 6 நாடுகளும் பங்கேற்கவில்லை.
ஐநா அவையில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானமானது கட்டாயச் சட்டம் அல்ல என்றபோதிலும், இனிவரும் காலங்களில் கல்வி நிறுவனங்கள், வரைபட நிறுவனங்கள், டிஜிட்டல் தளங்களில் இந்த புதிய வரைபடத்தைப் பயன்படுத்த ஊக்குவிப்படுகின்றன.
Summary
India votes in favour of UNGA resolution endorsing new world map
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







