அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழா

  பெங்களூர், ஜன. 8: பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் ஜனவரி 15-ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது, இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொள்கிறார்.  இதுகுறித்து தமிழ்ச் சங்கச் செயலாளர் கோ.தா

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

பெங்களூர், ஜன. 8: பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் ஜனவரி 15-ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது, இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொள்கிறார்.

 இதுகுறித்து தமிழ்ச் சங்கச் செயலாளர் கோ.தாமோதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா, திருவள்ளுவர் நாள் மற்றும் தமிழ் புத்தாண்டு ஆகிய முப்பெரும் விழாக்கள் ஜனவரி 15 மற்றும் 16-ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது.

ஜனவரி 15-ம் தேதி மாலை 5 மணிக்கு சங்க மாணவர்களின் இசை நிகழ்ச்சியை ஆசிரியர் ரபி நடத்துகிறார். அன்று மாலை 6 மணிக்கு பொங்கல் விழா சிறப்புரையை கி.வீரமணி நிகழ்த்துகிறார்.

 16ம் தேதி மாலை 5 மணிக்கு சாந்த சீலனின் தந்திரக் காட்சிகள், மாலை 6 மணிக்கு வாழ்க்கை என்பது பூந்தோட்டமா, போராட்டமா என்ற தலைப்பில் பட்டி மண்டபம் நடக்கிறது. உலக திருக்குறள் பேரவை செயலாளர் புலவர் மணி. தி.சு. மலையப்பன் நடுவராகப் பணியாற்றுகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.