பெங்களூர், அக்.8: மக்களிடையே கன்னட மொழி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில் மாநிலம் தழுவிய தேர் ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஊர்வலத்தை அக்டோபர் 12-ம் தேதி தென் கன்னட மாவட்டம் சுள்ளியாவில் முதல்வர் சதானந்தகெüடா தொடக்கி வைக்கிறார்.
இது குறித்து கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் முக்கியமந்திரி சந்துரு சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
மாநில மக்களிடையே கன்னட மொழியின் அருமை, பெருமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தொடர்பு மொழியாக கன்னடத்தைப் பயன்படுத்த வலியுறுத்தியும் கன்னட மொழித் தேர் ஊர்வலத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
சுள்ளியாவில் முதல்வர் சதானந்த கெüடா ஊர்வலத்தை கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் சந்திரசேகர கம்பாரா, கன்னடம் மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள், அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல்துறை அமைச்சர் கிருஷ்ண பாளேமர், உயர்கல்வித் துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா, தர்மஸ்தலா தர்மதிகாரி வீரேந்திர ஹெக்கடே உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
எல்லை மாவட்டங்களில் முக்கியத்துவம்: மொழித்தேர் ஊர்வலம் எல்லா மாவட்டங்களிலும் நடக்கிறது. இருப்பினும் ஆந்திரம், மகாராஷ்டிரம், தமிழகம், கேரளம், கோவா மாநிலங்களை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் ஊர்வலத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படும். எல்லைப் பகுதிகளில் இருக்கும் இதர மொழி மக்கள் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும்.
கன்னடத்தை மாநில ஆட்சி மொழியாக அங்கீகரித்த பின்பும், நிர்வாகத்தில் கன்னடம் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. கன்னட மொழிப் பயன்பாடு தொடர்பான அரசாணையைப் புறக்கணிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 18 - நேரலை

பழனி கோயில் நில மோசடி: சார் பதிவாளர், பத்திர எழுத்தர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை!
தவெகவில் அதிமுகவினர் இணைவது ஏன்? செங்கோட்டையன்

தமிழ்நாடு நாள்! - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


