பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம், பயணிகளுக்கான தின மற்றும் மாதாந்திர பேருந்து அட்டைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
அக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசு, அதிக அளவில் டீசலை கொள்முதல் செய்வோருக்கு, வெளிச் சந்தை விலையை விட, ஒரு லிட்டருக்கு ரூ.12 கூடுதலாக வசூலி்க்கிறது. இதனால், பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு, ஆண்டுக்கு ரூ.50 கோடி வரை கூடுதல் செலவாகிறது. கூடுதல் செலவை குறைக்கும் விதமாக, வெளிச்சந்தையில், டீசல் வாங்குவது, நிர்வாகத்திற்கு கூடுதல் பளுவையும், நடைமுறை சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. அதனால், கூடுதல் செலவை ஈடு செய்யும் விதமாக, பயணிகளுக்கான தின மற்றும் மாதாந்திர பேருந்து அட்டை கட்டணத்தை உயர்த்த, நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அடையாள அட்டையுடன், தின அட்டை பெற ரூ.55 ஆகவும், அடையாள அட்டை இன்றி, தின அட்டை பெற ரூ.60 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மாத அட்டை பெற, கறுப்பு பலகை உள்ள பேருந்துகளில் பயணிக்க ரூ.725 ஆகவும், சிவப்பு பலகை உள்ள பேருந்துகளில் பயணிக்க ரூ.925 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், கறுப்பு பலகை உள்ள பேருந்தில் பயணிக்க, மாத அட்டை பெறுவதற்கான கட்டணம் ரூ.650 ஆகவும், சிவப்பு பலகை உள்ள பேருந்தில் பயணிப்பதற்கான மாத அட்டை பெற ரூ.830 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தின அட்டைக்கான கட்டண உயர்வு, மே 11-ம் தேதி முதலும், மாத அட்டைக்கான கட்டண உயர்வு, ஜூன் 1-ம் தேதி முதலும் அமலுக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


