முன்னாள் ரயில்வே ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு

தென்மேற்கு ரயில்வேயில் முன்னாள் ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
Updated on
1 min read

தென்மேற்கு ரயில்வேயில் முன்னாள் ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்மேற்கு ரயில்வே-பெங்களூரு மண்டலத்தில் பல்வேறு பணிகளில் மீண்டும் வேலை செய்ய 62 வயதுக்குள்பட்ட முன்னாள் ரயில்வே ஊழியர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. மாத ஊதியத்தின் அடிப்படையில் வேலைசெய்ய உடல் தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக மண்டல ரயில்வே அலுவலகத்தையோ, ‌w‌w‌w.‌s‌w‌r.‌i‌n‌d‌i​a‌n‌r​a‌i‌l‌w​a‌y‌s.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்திலோ விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com