பிற்படுத்தப்பட்டோரை ஈர்க்க 5 மாநாடுகள் நடத்த ம.ஜ.த. திட்டம்
பிற்படுத்தப்பட்டோரை ஈர்க்க 5 மாநாடுகளை நடத்த ம.ஜ.த. திட்டமிட்டுள்ளது.


பிற்படுத்தப்பட்டோரை ஈர்க்க 5 மாநாடுகளை நடத்த ம.ஜ.த. திட்டமிட்டுள்ளது.
காங்கிரஸ், பாஜக கட்சிகளின் ஜாதி அரசியலை சமாளிக்கவும், குறிப்பாக பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளை ஈர்க்கவும் மாநிலம் முழுவதும் 5 பிற்படுத்தப்பட்டோர் மாநாடுகளை நடத்த ம.ஜ.த. திட்டம் வகுத்துள்ளது.
இந்த மாநாடுகளில் பங்கேற்று பிற்படுத்தப்பட்டோரை ஈர்க்க அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ம.ஜ.த. வின் முன்னணித் தலைவர்கள் பி.ஜி.ஆர். சிந்தியா, ஏ.எச். விஸ்வநாத், மதுபங்காரப்பா, பண்டேப்பா காஷெம்பூர் உள்ளிட்டவர்களுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தலைவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவுள்ளனர்.பிற்படுத்தப்பட்டோர் மாநாடுகள் பிப்ரவரி 23 முதல் 28-ஆம் தேதி வரை சிவமொக்கா, மைசூரு, பெங்களூரு, பீதர், பெலகாவி நகரங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் தவிர தாழ்த்தப்பட்டோரின் வாக்குகளையும் ஈர்க்க ம.ஜ.த. திட்டம் வகுத்துள்ளது. இதற்காக பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ம.ஜ.த., அந்தக் கட்சிக்கு 20 இடங்களை ஒதுக்கி தந்துள்ளனர்.
224 தொகுதிகளில் 204 இடங்களில் ம.ஜ.த.வின் வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளனர். பெங்களூருவில் பிப்.17-ஆம் தேதி ம.ஜ.த. மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தாழ்த்தப்பட்டோர் மாநாடு நடத்தப்படவிருக்கிறது.
இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மாயாவதி கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த மாநாட்டில் 130 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடவும் ம.ஜ.த. முடிவு செய்து, அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது.
ம.ஜ.த. ஆட்சிக்கு வந்தால் 2 துணை முதல்வர்களை உருவாக்கி, ஒன்று சிறுபான்மையினருக்கும், மற்றொன்று தாழ்த்தப்பட்டோருக்கும் வழங்குவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமி ஏற்கெனவே அறிவித்திருக்கிறார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியில் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருப்பதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் ம.ஜ.த. ஆலோசித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...