இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

"பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு தேவை'

விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்று மாநகரக் காவல் ஆணையர் சுனில் குமார் தெரிவித்தார்.
பெங்களூரு கெங்கேரியில் உள்ள கிளினீகல் குளோபல் மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை "ஐ ஆம் எமர்ஜென்ஸி ரெடி' திட்டத்தில் 10 ஆம்புலன்ஸ் இலவச சேவையை கொடியசைத்து தொடக்கிவைத்த பிறகு அவர் பேசியது: 
பெரும்பாலான விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க முடியாமல் போவதால், பலர் உயிரிழக்க நேரிடுகிறது. விபத்து நடந்து, அதனால் பாதிக்கப்பட்டவர்களை 1 மணி நேரத்துக்குள் மருத்துவமனைகளில் சேர்ந்தால், பலர் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது. எனவே, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கிளினீகல் குளோபல் குழுமத்தினர் ஜிபிஎஸ் பொருத்திய ஆம்புலன்ஸ் வாகன சேவையை தொடங்கியுள்ளனர்.
பெங்களூரில் எங்கு விபத்து நடந்தாலும், அதன் அருகில் உள்ள ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து, உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம் வர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விபத்து நடந்த உடன் பொதுமக்கள் செய்ய வேண்டிய அவசர உதவிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்றார். 
நிகழ்ச்சியில் மாநகரக் கூடுதல் காவல் ஆணையர் பி.கே.சிங், மேற்கு மண்டல இணை ஆணையர் ரவி ஹொன்னாவர், பிஜிஎஸ் மருத்துவக் குழுமத்தின் தலைவர் கே.இ.மோகன், மாமன்ற உறுப்பினர் சத்தியநாராயணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.