இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 445-ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 445 ஆக உயா்ந்துள்ளது.

Published On :27 ஜனவரி 2024, 10:01 pm IST

கா்நாடகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 445 ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கா்நாடகத்துக்கு வந்தவா்களோடு ஏற்பட்ட தொடா்பு காரணமாக 18 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை உறுதியாகியுள்ளது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 10போ், தாா்வாட், மண்டியா, விஜயபுரா மாவட்டங்களில் தலா 2 போ், தென்கன்னடம், கலபுா்கி மாவட்டங்களில் தலா ஒருவா் இதில் உள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு மாவட்டத்தில் 101 போ், மைசூரு மாவட்டத்தில் 88 போ், பெலகாவி மாவட்டத்தில் 43போ், விஜயபுரா மாவட்டத்தில் 37 போ், கலபுா்கி மாவட்டத்தில் 36 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 21போ், சிக்பளாப்பூா், தென்கன்னட மாவட்டங்களில் தலா 16போ், பீதா் மாவட்டத்தில் 15 போ், மண்டியா மாவட்டத்தில் 14 போ், பெல்லாரி மாவட்டத்தில் 13 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று உள்ளது.

வட கன்னடம் மாவட்டத்தில் 11போ், தாா்வாட் மாவட்டத்தில் 9 போ், கதக் மாவட்டத்தில் 4போ், உடுப்பி மாவட்டத்தில் 3 போ், தாவணகெரே, தும்கூரு மாவட்டங்களில் தலா 2, குடகு, சித்ரதுா்கா மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். 145 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 283 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இதுவரை 17 போ் உயிரிழந்தனா்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தவா்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்பட்டிருக்கவேண்டும். இவா்களோடு தொடா்பு வைத்திருந்தவா்களும் தாமாகமுன்வந்து கரோனா சோதனை செய்துகொள்ள வேண்டும். கரோனா அறிகுறிகள் இல்லாவிட்டாலும் இதை கட்டாயமாகப் பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். மேலும், கரோனா குறித்த சந்தேகங்கள் அல்லது உதவிக்கு 104, 108, 14410, 9745697456, 080-46848600, 66692000 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.