கிடப்பில் போடப்பட்ட உயர் மின்கோபுர விளக்கு பணி
சிதம்பரம், நவ. 8: சிதம்பரம் நகரில் இரு இடங்களில் உயர்மின்கோபுர விளக்குகள் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு செயல்படாமல் உள்ளது. ÷சிதம்பரம் கீழரதவீதி, கீழசன்னதி சந்திப்பில் நடராஜர் க


சிதம்பரம், நவ. 8: சிதம்பரம் நகரில் இரு இடங்களில் உயர்மின்கோபுர விளக்குகள் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு செயல்படாமல் உள்ளது.
÷சிதம்பரம் கீழரதவீதி, கீழசன்னதி சந்திப்பில் நடராஜர் கோயிலுக்கு செல்லும் வழியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய நகரமன்றத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் முயற்சியால் ரூ.6 லட்சம் செலவில் உயர்மின்கோபுர விளக்கு பொருத்தப்பட்டது. தற்போது மாவட்ட ஆட்சியரின் நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 வீதிகளின் சாலைகளை அகலப்படுத்தும் திட்டத்தினால் அந்த மின்கோபுர விளக்கு அகற்றப்பட்டு கீழசன்னதியில் பொருத்தும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.
÷இந்நிலையில் அங்கு மின்கோபுர விளக்கு பொருத்தினால் கோயிலிலிருந்து சுவாமி செல்வதற்கு இடையூறாக இருக்கும் என பொதுதீட்சிதர்கள், பக்தர்களும் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.
÷இதனையடுத்து ஆட்சியர் பெ.சீதாராமன் சம்பவ இடத்தை பார்வையிட்டு அந்த கோபுர விளக்கை தேரடி அருகே அமைக்குமாறு உத்தரவிட்டு சென்றார். அங்கு அமைத்தால் தேர் நிலையிலிருந்து புறப்பட இடையூறாக இருக்கும் என்பதால் உயர்மின்கோபுர விளக்கு பொருத்தப்படாமல் கீழசன்னதியில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மின்விளக்கின் மொத்தம் மதிப்பு ரூ.6 லட்சமாகும். ஆனால் இதுவரை மாற்றியமைப்பதற்கான செலவு ரூ.1.50 லட்சமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
÷இதேபோன்று சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் அரசினர் மகளிர் பள்ளி அருகே உயர்மின்கோபுர விளக்கும் அமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டு பொருத்தப்படாமல் பாதி நிலையிலேயே உள்ளது.
÷நகராட்சி அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் மக்களின் வரிப்பணம் இதுபோன்று பாழ்பட்டு யாருக்கும் பயனில்லாமல் போகிறது என சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...