இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கள்ளக்குறிச்சியில் தேமுதிக டிஜிட்டல் பேனருக்கு தீ வைப்பு

கள்ளக்குறிச்சி, ஜன. 8:  கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்பேரில் தே.மு.தி.க. டிஜிட்டல் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பேனருக்கு தீ வைத்ததில் பேனர் நடுவில் தீயில் கருகியது. கள்ளக்குறிச்சி - சேலம் - சென்னை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:50 am

தினமணி

கள்ளக்குறிச்சி, ஜன. 8:  கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்பேரில் தே.மு.தி.க. டிஜிட்டல் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பேனருக்கு தீ வைத்ததில் பேனர் நடுவில் தீயில் கருகியது.

கள்ளக்குறிச்சி - சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் ஏமப்பேரில் உள்ள காலனி பகுதியைச் சேர்ந்த தே.மு.தி.க.வினர் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள மாநாடு குறித்து ஊர் பகுதியான சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் ஏமப்பேர் பஸ் நிறுத்தம் அருகே கடந்த புதன்கிழமை பேனரை வைத்தனர்.

அப்போது ஊர் தரப்பைச் சேர்ந்த பல்வேறு கட்சியினர் இங்கே பேனர் வைக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை வட்டாட்சியர் தலைமையில் அமைதிக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அமைதிக் குழுக் கூட்டத்துக்கு வட்டாட்சியர் என்.மணி தலைமை வகித்தார். கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. கணேசன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு முதலில் போலீஸôர் அனுமதி பெற்ற பிறகே பேனர் வைக்க வேண்டும். இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டால் பேனர்கள் அகற்றப்படும் என பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் அ.முரளி, எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

முன்னதாக வெள்ளிக்கிழமை நள்ளிரவில் டிஜிட்டல் பேனரின் மையப் பகுதியில் தீ வைத்து விட்டனர். இதில் பேனரின் நடுப்பகுதி கருகியது. இதனால் சனிக்கிழமை அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.