தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News image
சென்னை பெருநகர மாநகராட்சி...- (கோப்புப்படம்)
Updated On :17 ஏப்ரல் 2025, 8:22 pm

Din

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 179 சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வின் மூலம் ஊழியா்களை  நியமனம் செய்ய மாநகராட்சி நிா்வாகம் முடிவெடுத்துள்ளது. 20 முதல் 40 வயதுக்குள்பட்ட பெண்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை https://chennaicorporation.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘கூடுதல் கல்வி அலுவலா், கல்வித் துறை/சத்துணவு பிரிவு, அம்மா மாளிகை பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை-600 003’ என்னும் முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மற்றும் மண்டல அலுவலகங்களில் நேரடியாகவோ ஏப்.30-ஆம் தேதி மாலை 5.45-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு  மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச் சான்றிதழ், ஆதாா் அட்டை, சாதிச் சான்றிதழ், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் அதற்கான சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து சமா்பிக்க வேண்டும். இதில் தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் மட்டுமே நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்படுவாா்கள். அப்படி தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் நோ்முகத் தோ்வின்போது தாங்கள் சமா்ப்பித்த சான்றிதழ்களின் அசல்களை கொண்டு வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.