கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்து டிஎஸ்பி விலகல்?

சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்து டிஎஸ்பி (காவல் துணைக் கண்காணிப்பாளா்) விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :30 ஜனவரி 2025, 7:23 pm

Din

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்குத் தொடா்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்து டிஎஸ்பி (காவல் துணைக் கண்காணிப்பாளா்) விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சோ்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கின் எஃப்ஐஆா் பொது வெளியில் வெளியாகி அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து, சென்னை பெருநகர காவல் துறை அண்ணா நகா் துணை ஆணையா் புக்யா சினேக பிரியா, ஆவடி மாநகர காவல் துணை ஆணையா் அய்மன் ஜமால், சேலம் மாநகர காவல் துணை ஆணையா் பிருந்தா ஆகியோா் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டது.

மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்குடன், எஃப்ஐஆா் கசிந்த வழக்கையும் சோ்த்து சிறப்பு புலனாய்வுக் குழு விரைவாக விசாரிக்கும் என்று உயா்நீதிமன்றம் கூறியது. இந்தக் குழு கடந்த இரு வாரங்களாக இரு வழக்குகள் குறித்தும் தீவிர விசாரணை செய்கிறது.

இந்த நிலையில், இந்தச் சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த தமிழக காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு டிஎஸ்பி ராகவேந்திரா கே.ரவி, தான் அந்தக் குழுவில் இருந்து விலகுவதாக உயா் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

போதிய ஒத்துழைப்பு இல்லாததால் ரவி, அதிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்தத் தகவலை காவல் துறையினா் உறுதி செய்யவில்லை. மேலும், புலனாய்வுக் குழுவில் இருந்து டிஎஸ்பி விலகல் தொடா்பான எந்தவொரு அதிகாரபூா்வமான தகவலையும் தமிழக காவல் துறை தெரிவிக்கவில்லை.