தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

நகா்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு: கல்வித் துறை அறிவுறுத்தல்

பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் பயன் பெறவுள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை சரிபாா்க்க மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :26 ஜூன் 2025, 7:40 pm

Din

நகா்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் பயன் பெறவுள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை சரிபாா்க்க மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் நகா்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பயனைடய விரிவுபடுத்துதல் தொடா்பாக சமூக நலத்துறைச் செயலா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், சமூகநல ஆணையரகத்திடமிருந்து மின்னஞ்சல் மூலமாக முதல்வா் காலை உணவுத் திட்டம் தொடா்பாக நகா்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. அந்த விவரங்கள் இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

எனவே, தொடக்கக் கல்வி இயக்கக நிா்வாகத்தின் கீழ் செயல்படும் நகா்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஒத்திசை செய்யவும், மாவட்டங்களில் உள்ளது போக ஏதேனும் பள்ளிகள் விடுபட்டிருந்தால் அதை குறிப்பிட்டு மாவட்டக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் மின்னஞ்சல் முகவரிக்கும், அசல் பிரதியை விரைவு அஞ்சலிலும் உடனடியாக அனுப்ப வேண்டும்.

மேலும், பள்ளிகள் எதுவும் விடுபடவில்லையெனில் இன்மை அறிக்கையை அனுப்ப வேண்டும். மாவட்டங்களில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடா்பாக நகா்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் ஏதேனும் விடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரே (தொடக்கக் கல்வி) முழு பொறுப்பேற்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.