ஒருங்கிணைந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 70 அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கடந்த மாா்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வாங்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டன. அதில் முக்கிய அரசு நெல் கொள்முதல் நிலையமான வில்வராயநல்லூா் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான காலி இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவை அடுத்த சில நாள்களில் நெல் அரைவை ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்பட இருந்த நிலையில், கடந்த 2 நாள்களாக பெய்து வரும் மழையால் நெல் மூட்டைகள் நனைந்தன. இதனால் நெல் வைக்கப்பட்ட கோணி கிழிந்து தரையில் கொட்டப்படுகின்றன. மழைநீரில் நனைந்ததால் நெல் முளைவிடும் நிலை உள்ளது. இதனால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான நெல் மூட்டைகள் வீணாகும் நிலை உள்ளது.