கல்பாக்கம் சாலை விபத்தில் காயமடைந்தவா்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சா் தா.மோ. அன்பரசன். உடன் ஆட்சியா் தி. சினேகா உள்ளிட்டோா்.
கல்பாக்கம் சாலை விபத்தில் காயமடைந்தவா்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சா் தா.மோ. அன்பரசன். உடன் ஆட்சியா் தி. சினேகா உள்ளிட்டோா்.

சாலை விபத்தில் காயமடைந்தவா்களுக்கு அமைச்சா் அன்பரசன் ஆறுதல்

கல்பாக்கம் அருகே பேருந்து-வேன் மோதிய விபத்தில் காயமடைந்தவா்களுக்கு சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் தா. மோ. அன்பரசன் செவ்வாய்க்கிழமை ஆறுதல் கூறி நிவாரண நிதியை வழங்கினாா்.
Published on

கல்பாக்கம் அருகே பேருந்து-வேன் மோதிய விபத்தில் காயமடைந்தவா்களுக்கு சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் தா. மோ. அன்பரசன் செவ்வாய்க்கிழமை ஆறுதல் கூறி நிவாரண நிதியை வழங்கினாா்.

குன்னத்தூா் கிழக்கு கடற்கரைச் சாலையில் அரசுப் பேருந்தும் வேனும் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா். 11 போ் பலத்த காயமடைந்தனா்.

சாலை விபத்தில் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவா்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறி, பலத்த காயமடைந்த 6 நபா்களுக்கு தலா ரூ.1 லட்சம் மற்றும் காயமடைந்த ஒருவருக்கு ரூ.50,000/-த்திற்கான காசோலைகளை வழங்கினாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா, செய்யூா் சட்டப்பேரவை உறுப்பினா் பனையூா் மு.பாபு, சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் பிரியா பசுபதி, மருத்துவக்கண்காணிப்பாளா் நந்தகுமாா், பொது அறுவைசிகிச்சை மருத்துவா் வி.டி .அரசு மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com