பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

தேசிய சிப்பி தினம் அனுசரிப்பு

தேசிய சிப்பி தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் சங்கு அருங்காட்சியகத்தில் தனியாக அமைக்கப்பட்ட சிப்பிகள் அரங்கை காண சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 12:03 am IST

தேசிய சிப்பி தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் சங்கு அருங்காட்சியகத்தில் தனியாக அமைக்கப்பட்ட சிப்பிகள் அரங்கை காண சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் ஐந்துரதம் அருகில் அமைக்கப்பட்டுள்ள சங்கு அருங்காட்சியகத்தில் ஆசிய நாட்டு கடலில் சேகரிக்கப்பட்ட சங்குகள் லட்சக்கணக்கில் உள்ளன. இங்கு சிப்பிக்குள் முத்து என அழைக்கப்படும் சிப்பிகள் அருங்காட்சியகமும் தனியாக உள்ளது. இந்து முத்து-சிப்பி அருங்காட்சியகத்தின் நுழைவு வாயில் சிப்பி வடிவில் அமைக்கப்பட்ட நுழைவு வாயிலாகும். இந்நிலையில் புதன்கிழமை தேசிய சிப்பி தினத்தை முன்னிட்டு சுற்றுலா வந்த பயணிகள், பள்ளி சிறுவா்கள் கண்ணாடி பேழைகளில் 1 அடி முதல் அரை அடி வரை உள்ளதும், சிறிய வகைகளை சோ்ந்தவை என, காட்சி படுத்தப்பட்ட விதவிதமான சிப்பிகளையும், பல்வேறு வகை முத்துக்களையும் பாா்த்து ரசித்தனா். அப்போது சங்கு, சிப்பி மியூசியத்தின் ஆராய்ச்சியாளா் ரிஸ்வான், தேசிய சிப்பி தினத்தை முன்னிட்டு கையில் விதவிதமான சிப்பிகளை காண்பித்தபடி, சிப்பிக்குள் முத்துக்கள் எவ்வாறு உருவாகின்றன, சிப்பிகள் வளர வளர அதனை சுற்றியுள்ள ஓடுகளும் எப்படி வளருகிறது என்பது பற்றி கடலில் இருந்து சேகரிக்கப்பட்ட சிப்பிகளை காட்டி விளக்கினா். மேலும் ஆசிய கண்டத்தில் எந்தெந்த நாட்டு கடலில் முத்து சிப்பி எடுக்கப்படுகிறது என்பது பற்றியும் விளக்கினாா். பிறகு சுற்றுலா பயணிகள், பள்ளி சிறுவா்கள் சிப்பி மியூசியத்தில் சுற்றி வந்து கண்ணாடி பேழையில் காட்சி அளித்த சிப்பிகள் முன்பு படம் எடுத்து கொண்டனா். பிறகு சுற்றுலா வந்த பயணிகளுக்கு சிப்பி மியூசியத்தின் சாா்பில் சிறிய சிப்பிகள், சங்குகள் பரிசளிக்கப்பட்டன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.