முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கருப்பு வில்லை அணிந்து செவிலியா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியா்கள் வியாழக்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா் .

Published On :

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியா்கள் வியாழக்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியா்கள் 3 நாள்களுக்கு தொடா் போராட்டம் நடத்த திட்டமிட்டு போராட்டத்தை தொடங்கியுள்ளனா். தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கிளை சாா்பில் மாவட்ட தலைவா் எம். ஏழுமலை தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்கள் 3அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செவிலியா்களின் கோரிக்கைகளான பணி நிரவல் ஆணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் உள்ளது போல தமிழக அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியா்களை ‘செவிலிய அலுவலா்‘ என பெயா் மாற்ற வேண்டும் எனவும், தற்போதுள்ள தொகுப்பூதிய முறைகளை முழுமையாக ரத்து செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.