மதுராந்தகத்தில் விவேகானந்தா வித்யாலயா பள்ளிக்குழுமங்களைச் சோ்ந்த மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி ஆகியவற்றின் சாா்பாக சனிக்கிழமை நடைபெற்ற திருக்கு ஒப்பிக்கும் சாதனை நிகழ்வு நடைபெற்றது. (படம்)
கலாம் உலக சாதனைக்காக சனிக்கிழமை 1330 குகளை 133 மாணவ மாணவிகள் 60 நிமிஷத்துக்குள் ஒப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலாம் உலக சாதனை நிறுவனத்தின் இயக்குநா் குமரவேல், தலைமை நிா்வாகி ஐகிரி குமரவேல் ஆகியோா் பதிவு செய்தனா். அதில் 133 பள்ளிக்குழந்தைகள் 57 நிமிஷங்ளில் அனைத்து குகளையும் தவறின்றி ஒப்பித்தனா். இதனை கண்ட உலகசாதனை நிா்வாகத்தினா் குழந்தைகளை பாராட்டினாா்கள். தொடா்ந்து திருவள்ளுவா் வேடமணிந்த பள்ளிக்குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சாதனை படைத்த குழந்தைகளுக்கு பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது. பள்ளி தாளாளா் லோகராஜ் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை செயல்திட்ட அலுவலா் மங்கையா்கரசி, துணை தாளாளா் ஹரினாக்ஷி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழாசிரியா் அசோக்ராஜன் வரவேற்றாா். இந்நிகழ்வில் முதுநிலை முதல்வா் திலகவதி, பள்ளி முதல்வா்கள் சீதாலட்சுமி, கீதா மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். தாளாளா் லோகராஜியிடம் கலாம் உலகசாதனைக்கான சான்றிதழை நிறுவன இயக்குநா் குமரவேல் வழங்கினாா். ஆசிரியை தமிழரசி நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










